தமிழ்த் துறை
தமிழன் என்றோர் இனமுண்டு. . .
- நாமக்கல் கவிஞர்
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும். . .
அன்பே அவனுடை வழியாகும்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி-தமிழ்க்குடி
தமிழும் அதன் மொழி சிறப்பும் சொல்லிலடங்கா . தமிழ் மொழி மனித வாழ்வியலோடு இரண்டற கலந்தது. அத்தகைய மொழியினை, வாழ்வியல் பாடத்தினை எம் மாணவர்களுக்கு போதிப்பதில் மிக சிறப்பாக பணியாற்றிவருகிறது தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் தமிழ்த்துறை. கல்லூரி துவங்கிய 1972 முதலே மொழி பயிற்றுவிக்கும் (பகுதி-I) துறையாக இருந்து 2014 ஆம் ஆண்டு முதல் இளநிலை இலக்கியம் (B.Litt) தமிழ் வகுப்பு (மாலைநேரப் பிரிவில் ) துவங்கப்பட்டு மிக சிறப்புடன் இயங்கி வருகிறது . சீகன்பால்க் தமிழ்ப்பேரவை என்ற அமைப்பினை ஏற்படுத்தி முத்தமிழ் விழா ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகிறது. கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, பாட்டு, நடனம், சிறுகதை, குழுநடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிதையாளர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றியுள்ளனர் . எம் துறை சார்ந்த மாணவர்கள் கல்லூரி அளவிலும், மாவட்ட, மண்டல அளவிலும் பங்குபெற்று பல்வேறு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் பெற்று எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், B.Litt தமிழிலக்கியத்திலும் மொழிப்பாடம் (பகுதி-I) தமிழ் வகுப்பிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று செல்கின்றனர். எம் துறையை சேர்த்த அனைத்து பேராசிரியர்களின் இதற்கான பங்களிப்பு மிகச் சிறப்பானதாகத் தொடர்கிறது.